/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாலையோரத்தில் தடுப்புவேலி சேதம்: வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
/
சாலையோரத்தில் தடுப்புவேலி சேதம்: வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
சாலையோரத்தில் தடுப்புவேலி சேதம்: வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
சாலையோரத்தில் தடுப்புவேலி சேதம்: வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
ADDED : ஜன 01, 2024 05:11 AM

முதுகுளத்துார்; முதுகுளத்துார் -- -சிக்கல் சாலை இளஞ்செம்பூர் அருகே சாலையோரத்தில் உள்ள தடுப்புவேலி சேதமடைந்துள்ளது.
முதுகுளத்துார் அருகே பூங்குளம், கண்டிலான், இளஞ்செம்பூர், பூக்குளம் வழியாக சிக்கல் செல்லும் சாலை உள்ளது. இங்கு இளஞ்செம்பூர் அருகே சாலையோரத்தில் உள்ள ஊருணி விபத்து ஏற்படாத வகையில் அலுமினிய தடுப்புவேலி அமைக்கப் பட்டுள்ளது.
தற்போது தடுப்புவேலி சேதமடைந்து சாய்ந்து கிடைக்கிறது.
இதனால் இரவு நேரத்தில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
பயணிகள் அச்சம் தவிர்க்க சேதமடைந்த தடுப்பு வேலியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்என கிராம மக்கள் வலியுறுத்தினர்.