/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டோர குப்பையால் சுகாதாரக்கேடு
/
ரோட்டோர குப்பையால் சுகாதாரக்கேடு
ADDED : ஜூன் 13, 2025 11:32 PM

பெரியபட்டினம்: பெரியபட்டினம், வண்ணாங்குண்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேட்டால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பெரியபட்டினம் மற்றும் வண்ணாங்குண்டு சுற்றுவட்டார கிராமங்களில் தெருக்களில் முறையாக குப்பை தொட்டிகள் வைக்கப்படாத நிலை உள்ளது.இதனால் அப்பகுதியில் வசிப்போர் சாலை ஓரங்களில் குறிப்பிட்ட இடங்களில் பிளாஸ்டிக் கழிவு, மீன் இறைச்சி கழிவுகள், மக்காத குப்பையை சாலையில் வீசுவது வாடிக்கையாகியுள்ளது.
வெளியூரில் இருந்து வரக்கூடிய மக்கள் முகம் சுளிக்கின்றனர். இப்பகுதியில் குப்பையை கால்நடைகள் உணவாக உட்கொள்வதால் அவற்றிற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரங்களில் காணப்படுகிறது.
எனவே பெரியபட்டினம் மற்றும் வண்ணாங்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் முறையாக குப்பையை அகற்றி மட்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.