ADDED : ஏப் 29, 2026 03:49 AM

அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி அருகே பெருமாள் கோவில் கிராமத்தில் பஸ் நிற்கும் பகுதியில் ரோட்டோரம் பள்ளம் உள்ளது. கோயிலுக்கு எதிரே கண்மாய் மற்றும் ஊருணி என நீர்நிலை உள்ளது.
இப்பகுதி ரோட்டில் இருந்து 6 அடிக்கும் மேல் பள்ளமாக இருக்கிறது. தொடர்ந்து இதன் வழியாக அரசு டவுன் பஸ் உட்பட டூவீலர் மற்றும் சரக்கு வாகன ஓட்டிகள் அடிக்கடி சென்று வருகிறது.
இரவு மட்டுமின்றி பகலிலும் பள்ளத்தை அறியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இதனால் அப்பகுதியில் விபத்து அச்சம் அதிகரித்துள்ளது. ரோட்டோர பள்ளத்தை சீரமைத்து தடுப்பு சுவர் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
