ADDED : ஜூலை 03, 2026 10:06 PM
அ நிறம் | அளவு
கடலாடி: கடலாடி முதல் முதுகுளத்துார் செல்லும் 15 கி.மீ.,க்கு சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கடலாடியைச் சேர்ந்த தன்னார்வலர் பூமிநாதன் கூறியதாவது:
கடலாடியில் இருந்து ஆப்பனுார் வரை உள்ள பகுதிகளில் இரு புறங்களிலும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இவற்றில் டிராக்டர்கள் மூலமாக முறையாக தண்ணீர் விட்டு பராமரிப்பு செய்யாத நிலை இருந்ததால் பெருவாரியான மரக்கன்றுகள் கருகி பயனில்லாமல் போய்விட்டது.
இதனால் அரசு நிதி வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் முறையாக பராமரிப்பு செய்து மரக்கன்றுகளை மீண்டும் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
