/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் சாலையோர வியாபாரிகள் குடுமி பிடி சண்டை
/
உத்தரகோசமங்கையில் சாலையோர வியாபாரிகள் குடுமி பிடி சண்டை
உத்தரகோசமங்கையில் சாலையோர வியாபாரிகள் குடுமி பிடி சண்டை
உத்தரகோசமங்கையில் சாலையோர வியாபாரிகள் குடுமி பிடி சண்டை
ADDED : ஜூன் 15, 2025 11:05 PM
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ராஜகோபுரம் அருகே விற்பனை செய்வது தொடர்பாக பெண்களுக்கு இடையே குடுமிபிடி சண்டை நடந்தது. இப்பிரச்னைக்கு போலீசார், ஊராட்சிநிர்வாகம் தீர்வு காண வேண்டும்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி ராஜகோபுரம் அருகே ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன. பூக்கடைகள், பதநீர் மற்றும் ருத்ராட்சம், படங்கள் விற்போர் என ஏராளமானோர் இருபுறங்களிலும் கடை விரித்துள்ளனர்.
இந்நிலையில் பதநீர் விற்பனை செய்து வந்த இரு பெண்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.
எனவே உத்தரகோசமங்கை போலீசார், ஊராட்சி நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை முறைப்படுத்த வேண்டும்.