/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோலர் ஸ்கேட்டிங்: மாணவர்களுக்கு பாராட்டு
/
ரோலர் ஸ்கேட்டிங்: மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : பிப் 07, 2026 05:39 AM
ஆர்.எஸ்.மங்கலம்: கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற ஆர்.எஸ்.மங்கலம் மாணவர்களை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி, கோவாவில் உள்ள மடுக்கோன் ஆர். எஸ்.எப்.ஐ., மைதானத்தில் பிப்.1 ல் நடந்தது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிவகங்கை மாவட்ட ஸ்போர்ட்ஸ் ரோலர் ஸ்கேட்டிங் அகடாமியின் பயிற்சி பள்ளி மாணவர்களான, ஆர்.எஸ்.மங்கலம் ஹேலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட கிஷோர் 8, ஜூடு 7, ரோகித் 7, ஆகியோர் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றனர். சாதித்துள்ள மாணவர்களை பயிற்சி அகடாமி தலைவர் ஜோதிபாசு, பயிற்சி ஆசிரியர் பாலமுருகன், பள்ளி ஆசிரியர்கள், மக்கள் பாராட்டினர்.

