/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் பெயர்ந்து விழும் கூரை: விபத்து அபாயம் உள்ளதால் சீரமைக்க வலியுறுத்தல்
/
கலெக்டர் அலுவலகத்தில் பெயர்ந்து விழும் கூரை: விபத்து அபாயம் உள்ளதால் சீரமைக்க வலியுறுத்தல்
கலெக்டர் அலுவலகத்தில் பெயர்ந்து விழும் கூரை: விபத்து அபாயம் உள்ளதால் சீரமைக்க வலியுறுத்தல்
கலெக்டர் அலுவலகத்தில் பெயர்ந்து விழும் கூரை: விபத்து அபாயம் உள்ளதால் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 22, 2025 06:44 AM

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் சேதுபதி நகரில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள பழைய கலெக்டர் அலுவலகம் 1988ல் கட்டப்பட்டது. 36 ஆண்டுகளை கடந்ததால் கட்டடத்தின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது.
கீழ்தளம், மேல்தளத்தில்முதன்மை கல்வி அலுவலகம், மகிளா நீதிமன்றம், ஆதார் புகைப்பட மையம், இ-சேவை மையம், மத்திய கூட்டுறவு வங்கி என பல அலுவலங்கள் செயல்படுகின்றன.
தினமும் அலுவல பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இக்கட்டடம் தொடர் பராமரிப்பு இல்லாமல் தற்போது செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. போதிய தண்ணீர் வசதி இன்றி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே கருவூலம் அலுவலக கட்டடம் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது போல் பழைய கலெக்டர் அலுவலக கட்டட விரிசல்களை சரி செய்து முழுமையாக புதுப்பிக்க பொதுப்பணித்துறை (கட்டுமானம்)அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என பணியாளர்கள், மக்கள் வலியுறுத்தினர்.
பெயரளவில் அடிப்படை வசதி
பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்நீதிமன்றம், மத்திய கூட்டுறவு வங்கி, ஆதார் புகைப்படம் மையம், இ-சேவை மையம் ஆகிய இடங்களுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மக்கள் பலர் வருகின்றனர்.
அவர்களுக்குரிய குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. இதனால் கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும்.
மேலும் அலுவலகம்உள் பகுதியில் மின் வயர்கள் வெளியே பல இடங்களில் தொங்குவதால் மின் விபத்து அபாயமும் உள்ளது.