/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோஜா 4 மடங்கு அதிகரிப்பு காதலர் தினம் எதிரொலி
/
ரோஜா 4 மடங்கு அதிகரிப்பு காதலர் தினம் எதிரொலி
ADDED : பிப் 14, 2024 01:13 AM

ராமநாதபுரம்:இன்று காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜாப் பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெங்களூரு, ஓசூரிலிருந்து குறைந்த அளவே வந்துள்ளதால் விலை 4 மடங்கு அதிகரித்து ஒற்றை ரோஜாப்பூ 40 ரூபாய்க்கும், கட்டு (10 முதல் 15 பூக்கள்) 500 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சிமடம் பகுதியில் மல்லிகை பூ சாகுபடி செய்கின்றனர். மற்ற பெரும்பாலான பூக்கள் வெளி மாவட்டங்களில் இருந்துவிற்பனைக்கு வருவதால் பிற பகுதிகளை விட இங்கு பூக்களின் விலை எப்போதும் அதிகமாக உள்ளது.
இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பலர் இந்த நாளில் தங்களது அன்புக்குரியவர்களுக்கு அன்பின் அடையாளமாக ரோஜாப்பூ வழங்குவர்.
ராமநாதபுரம் பூ வியாபாரி முருகன் கூறியதாவது:
காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களுரூ, ஊட்டி, ஓசூர் மார்க்கெட்டிலிருந்து ரோஜாப் பூக்கள் கொள்முதல் செய்துள்ளோம்.
மஞ்சள், வெள்ளை, சிவப்பு வண்ணங்களில் வந்துள்ளன. ஒரு கட்டில், 10 முதல் 14 பூக்கள் இருக்கும். தேவை அதிகரிப்பால் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது. 10 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு விற்ற இலையுடன் கூடியரோஜா ஒன்று தற்போது 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையும், கட்டு 400 ரூபாய் முதல் 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

