தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரோட்டோரம் திறந்த வெளியில் சமையல் கூடங்களால் பாதிப்பு

 ரோட்டோரம் திறந்த வெளியில் சமையல் கூடங்களால் பாதிப்பு

 ரோட்டோரம் திறந்த வெளியில் சமையல் கூடங்களால் பாதிப்பு


ADDED : செப் 21, 2026 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 12:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாயல்குடி: சாயல்குடி நகர் பகுதிகளில் ரோட்டோர ஓட்டல்களில் சமையற்கூடங்கள் சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளதால் பாதிப்பு ஏற்படுகிறது.

இங்கு காலை முதல் இரவு வரை தோசை, ஆம்லெட், சிக்கன் உள்ளிட்டவைகளை பொரிக்கும் போது அவ்வழியாக செல்லும் மக்களின் மீது சமையல் செய்யக்கூடிய நீர் மற்றும் புகை படுகிறது. தன்னார்வலர்கள் கூறிய தாவது:

சாயல்குடி ராமநாதபுரம் ரோடு மற்றும் அருப்புக்கோட்டை ரோடு, சாயல்குடி நகர் பகுதிகளில் ரோட்டோர ஓட்டல்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் கடைகளுக்கு உள்ளே சமையல் கூடங்களை அமைக்காமல் சாலையில் வெளியே சிலிண்டர் அடுப்புகள் மற்றும் விறகு அடுப்பு ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள் சாலையை கடக்கும் போது புகை மற்றும் சமையல் நெடி உள்ளிட்டவைகளால் சிரமத்தை சந்திக் கின்றனர்.

இதே போன்று ராமநாதபுரம் செல்லும் சாலையில் மிளகாய், மல்லி உள்ளிட்ட மசாலா பொருட்களை அரைக்கும் மில்கள் உள்ளன. அவற்றிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் காரமான புகை வாகன ஓட்டிகளை பெரும் பாதிப்பு அடைய வைக்கிறது. எனவே அவற்றிற்கு உரிய முறையில் திரையிட்டு மூடி வைக்க வேண்டும்.

பாதிப்பு மற்றும் விபத்துகள் நேரிடுகிறது. இவ்விஷயத்தில் சாயல்குடி போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கண்டும் காணா மலும் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us