/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விபத்தை தடுப்பதற்கு ரவுண்டானா தேவை
/
விபத்தை தடுப்பதற்கு ரவுண்டானா தேவை
ADDED : மார் 27, 2025 07:16 AM
தொண்டி: தொண்டியில் மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் தாறுமாறாக செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்த ரவுண்டானா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தொண்டி செக்போஸ்ட் அருகில் நம்புதாளை, தொண்டி, திருவாடானை செல்லும் சந்திப்பு இடமாக உள்ளது. ராமநாதபுரம் --பட்டுக்கோட்டை கிழக்கு கடற்கரை சாலையாகவும், மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ளது.
வாகனங்கள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் சந்திக்கும் போது போக்குவரத்து நெரிசல், விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. நம்புதாளை மக்கள் கூறுகையில், இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக சந்திப்பின் மையப்பகுதியில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்தை பிரித்து விடுவதே பிரச்னைக்கு தீர்வாகும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரவுண்டானா அமைப்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றனர்.