/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.2 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
/
ரூ.2 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
ADDED : நவ 13, 2025 02:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: கொழும்பு நீர்கொழும்பு மற்றும் சிலாபம் கடற்கரையில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து சென்ற போது அங்கு நிறுத்தி இருந்த 3 பைபர் கிளாஸ் படகுகளை சோதனையிட்டனர். இதில் 22 மூடைகளில் 742 கிலோ பீடி இலைகள் இருந்தது. பீடி இலைகளையும், 3 படகுகளையும் பறிமுதல் செய்து படகு உரிமையாளர்கள் 3 பேரை கைது செய்து நீர்கொழும்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பீடி இலைகளின் மதிப்பு ரூ.2 லட்சம். இவற்றை துாத்துக்குடி கடலோரப் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் கடத்தி வந்திருக்கலாம் என தெரிகிறது. இதில் தொடர்புடைய துாத்துக்குடி கடத்தல்காரர்கள் யார் என மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

