தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரூ.2.24 லட்சம் பறிமுதல்

 ரூ.2.24 லட்சம் பறிமுதல்

 ரூ.2.24 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 23, 2026 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 07:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடியில் பறக்கும் படை குழுவினரால் 3 இடங்களில் இருந்து 2 லட்சத்து 24 ஆயிரத்து 70 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* பரமக்குடி அரியனேந்தல் பாலம் அருகில் பறக்கும் படை குழு அலுவலர் செல்வகுமார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முஸ்தபா காதர் மஸ்தான் என்பவர் காரில் கொண்டு சென்ற 51 ஆயிரத்து 70 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

*இதேபோல் ராமகிருஷ்ண பிரபு தலைமையில் சோதனையில் ஈடுபட்ட போது, ராமர் என்பவர் காரில் கொண்டு சென்ற 55 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

*பாலதண்டாயுதம் தலைமையில் அண்டக்குடி விலக்கு ரோட்டில் வாகன சோதனையில் சிவகோபாலன் காரில் கொண்டு சென்ற கணக்கில் வராத பணம் ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சுற்றுலா பயணியிடம் ரூ.51,000 பறிமுதல் பரமக்குடி: பரமக்குடி அருகே வாகன சோதனையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தவரின் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பரமக்குடி சட்டசபை தொகுதியில் பறக்கும் படை அலுவலர் ராமகிருஷ்ண பிரபு தலைமையில் அரியனேந்தல் பகுதி நான்கு வழி சாலையில் வாகன சோதனையில் இருந்தனர்.

அப்போது கர்நாடக மாநிலம் உட்பட்நாகாடி பகுதியைச் சேர்ந்த இசுபு, காரில் கொண்டு சென்ற ரூ.51 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரித்த போது, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வந்ததாக தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us