ADDED : மார் 29, 2026 05:23 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை தொகுதி பேராவூர் செக்போஸ்ட்டில் பறக்கும்படை அலுவலர் ரவீந்தர் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அவ்வழியாக சென்ற காரை சோதனை செய்த போது ஆவணம் இன்றி கொண்டு செல்லபட்ட ரூ. 68 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யபட்டது.
அதே போல் வெண்ணததுார் செக்போஸ்டில் பறக்கும்படை அலுவலர் ராஜ்குமார் தலைமையில் அந்த வழியாக சென்ற காரை சோதனை செய்த போது ரூ.89 ஆயிரத்து 500ம், தேர்போகி பஸ்ஸ்டாண்ட் அருகே ரூ.72 ஆயிரம் பறிமுதல் செய்யபட்டது. அனைத்தும் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கபட்டது.
