/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொழில் முன்னோடிகள் திட்டத்தில்ரூ.2.65 கோடி நலத்திட்ட உதவிகள்
/
தொழில் முன்னோடிகள் திட்டத்தில்ரூ.2.65 கோடி நலத்திட்ட உதவிகள்
தொழில் முன்னோடிகள் திட்டத்தில்ரூ.2.65 கோடி நலத்திட்ட உதவிகள்
தொழில் முன்னோடிகள் திட்டத்தில்ரூ.2.65 கோடி நலத்திட்ட உதவிகள்
ADDED : டிச 07, 2024 05:45 AM
ராமநாதபுரம்: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 991பேருக்கு ரூ.2 கோடியே 65 ஆயிரம் மதிப்பிலானநலத்திட்ட உதவிகள்வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் தனியார் மண்டபத்தில் இதற்கான விழா நடந்தது. கலெக்டர்சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.அமைச்சர் ராஜகண்ணப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக டிச.6ல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் காணொளி காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டது.
அதன் பிறகு நகராட்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தாட்கோ, மாவட்ட கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 991 பேருக்கு ரூ.2 கோடியே 65 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சமபந்தி விருந்து நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு,பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.