ADDED : மார் 26, 2026 07:45 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை தொகுதி அச்சுந்தன் வயல் செக்போஸ்ட்டில் பறக்கும் படை அலுவலர் ஆறுமுகம் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அந்த வழியாக சென்ற காரை சோதனை செய்த போது ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் பட்டணம்காத்தான் செக்போஸ்ட்டில் பறக்கும் படை அலுவலர் நவீன் தலைமையில் நடந்த சோதனையில் காரில் ஆவணம் இன்றி கொண்டு செல்லபட்ட ரூ.1 லட்சம் கைப்பற்றப்பட்டது.
அச்சுதந்ன்வயல் செக்போஸ்ட்டில் பறக்கும் படை அலுவலர் கோபால் தலைமையில் சோதனை செய்த போது ஒரு காரில் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 370 பறிமுதல் செய்யப்பட்டது. அனைத்தும் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
