/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹார்டுவேர்ஸ் கடையில் பூட்டை உடைத்து ரூ.40,000 திருட்டு
/
ஹார்டுவேர்ஸ் கடையில் பூட்டை உடைத்து ரூ.40,000 திருட்டு
ஹார்டுவேர்ஸ் கடையில் பூட்டை உடைத்து ரூ.40,000 திருட்டு
ஹார்டுவேர்ஸ் கடையில் பூட்டை உடைத்து ரூ.40,000 திருட்டு
ADDED : ஆக 31, 2025 11:34 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் டி.டி.மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சகாபுதீன் மகன் முகமது அப்துல்லா 39. இவர் கீழக்கோட்டையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் கடையை பூட்டி சென்றுள்ளார்.
நேற்று காலை கடை திறப்பதற்காக வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர் திறந்திருப்பதை பார்த்த முகமது அப்துல்லா, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கடையை திறந்து பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. மேலும் மர்மநபர்கள் சிக்கி விடாமல் இருக்க, கடையில் இருந்த சி.சி.டி.வி., கேமராவின் ரிஷிவரையும் திருடி சென்றது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்கள் கடையில் ஆய்வு செய்து கைரேகைகளை பதிவு செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.