ADDED : மார் 19, 2026 04:38 AM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சட்டசபை தேர்தல் அறிவித்ததை முன்னிட்டு 24 மணி நேரமும் தனிப் பிரிவு அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சாயல்குடி அருகே மலட்டாறு கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று காலை 10:00 மணிக்கு தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டனர்.
தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணேசன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது காரில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜனிடமிருந்து ரூ.54,000 பறி முதல் செய்யப்பட்டது.
