/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.60.97 லட்சம் மோசடி: தந்தை, மகன் கைது
/
ரூ.60.97 லட்சம் மோசடி: தந்தை, மகன் கைது
ADDED : மார் 30, 2025 02:00 AM
ராமநாதபுரம்:கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமசுப்பிரமணியன். இவர் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தொகை வழங்குவதற்காக ஒரு நபருக்கு வங்கிக்கு தரப்படும் கமிஷன் ரூ.30 வழங்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார்.
ஆனால் அந்த கமிஷன் தொகையை கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக உள்ள செல்லப்பா (எ) மார்ட்டின் 35, கம்ப்யூட்டரில் திருத்தம் செய்து அவரது தந்தை மனோகரன் 60, வங்கிக் கணக்கில் ரூ.33. 75 லட்சமும், பவுல் ராணி என்பவரது கணக்கில் ரூ.27.22 லட்சமும் செலுத்தி மொத்தமாக ரூ.60.97 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து ராமசுப்பிரமணியன் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மார்ட்டின், மனோகரனை கைது செய்த போலீசார் பவுல் ராணியை தேடி வருகின்றனர்.