/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு தொடக்கபள்ளிக்கு கழிப்பறை கட்டுவதற்கு ரூ.7 லட்சம் ஒதுக்கீடு
/
அரசு தொடக்கபள்ளிக்கு கழிப்பறை கட்டுவதற்கு ரூ.7 லட்சம் ஒதுக்கீடு
அரசு தொடக்கபள்ளிக்கு கழிப்பறை கட்டுவதற்கு ரூ.7 லட்சம் ஒதுக்கீடு
அரசு தொடக்கபள்ளிக்கு கழிப்பறை கட்டுவதற்கு ரூ.7 லட்சம் ஒதுக்கீடு
ADDED : நவ 30, 2024 06:43 AM

தொண்டி; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தொண்டி அரசு தொடக்கப் பள்ளியில் (கிழக்கு) கழிப்பறை கட்ட் ரூ.7 லட்சம் ஒதுக்கப்பட்டது. தொண்டி பேரூராட்சி அலுவலகம் அருகே அரசு தொடக்கப்பள்ளி (கிழக்கு) உள்ளது. 224 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை கட்டப்பட்டது.
போதிய பராமரிப்பு இல்லாமல் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் மாணவர்கள் அச்சமடைந்ததால் பூட்டப்பட்டது.
இதையடுத்து 224 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் கழிப்பறை வசதியில்லாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக கழிப்பறை கட்ட ரூ.7 லட்சம் ஒதுக்கப்பட்டது.
நேற்று திருவாடானை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., கணேசன் மற்றும் அலுவலர்கள் கழிப்பறை கட்டடம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டனர். தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் உடனிருந்தார்.