/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதல் தலைமுறையினர் தொழில் துவங்க ரூ.75 லட்சம் மானியம்
/
முதல் தலைமுறையினர் தொழில் துவங்க ரூ.75 லட்சம் மானியம்
முதல் தலைமுறையினர் தொழில் துவங்க ரூ.75 லட்சம் மானியம்
முதல் தலைமுறையினர் தொழில் துவங்க ரூ.75 லட்சம் மானியம்
ADDED : நவ 23, 2024 06:33 AM
ராமநாதபுரம்; முதல் தலைமுறையினர் புதிய தொழில் துவங்க தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.75 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயனடைய பிளஸ் 2 தேர்ச்சி, பட்டம், டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள்துவங்க குறைந்த பட்சம் ரூ.10லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை வங்கி கடன் பெறலாம். விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். வருமான வரம்பு ஏதுமில்லை. 3 ஆண்டுகள் தமிழ்நாட்டில்தொடர்ந்து வசிப்பவராகவும், முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும் இருக்க வேண்டும்.
பொதுப்பிரிவினராக இருந்தால் திட்ட மதிப்பீட்டில் சொந்த முதலீடு 10 சதவீதம், சிறப்பு பிரிவினராக இருந்தால் 5 சதவீதம் செய்ய வேண்டும். இத்திட்டத்தில் துவங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.75 லட்சம் அரசு மானியம் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 10 சதவீதம் கூடுதல் மானியம், 3 சதவீதம் பின் முனை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in/needs இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்டத் தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.