/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்திய ரூ.80 லட்சம் கஞ்சா ஆயில், கஞ்சா பறிமுதல்
/
இலங்கைக்கு கடத்திய ரூ.80 லட்சம் கஞ்சா ஆயில், கஞ்சா பறிமுதல்
இலங்கைக்கு கடத்திய ரூ.80 லட்சம் கஞ்சா ஆயில், கஞ்சா பறிமுதல்
இலங்கைக்கு கடத்திய ரூ.80 லட்சம் கஞ்சா ஆயில், கஞ்சா பறிமுதல்
ADDED : ஜூலை 20, 2025 03:06 AM
ராமநாதபுரம்:-தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா ஆயில், ரூ.30 லட்சம் மதிப்புள்ள 81 கிலோ கஞ்சா இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் இருந்து இலங்கை பகுதிக்கு கஞ்சா குஷ்(கஞ்சா ஆயில்)கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து மன்னார் கடற்கரையில் இலங்கை கடற்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா குஷ் 5 கிலோவை கைப்பற்றினர். தமிழகத்திலிருந்து கடத்தி வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இதன் மதிப்புரூ.50 லட்சம்.
81 கிலோ கஞ்சா பறிமுதல்
தமிழகத்தில் இருந்து கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக இலங்கை ராணுவ புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கடத்திவரப்பட்ட 81 கிலோ கஞ்சாவை இலங்கை ராணுவ புலனாய்வுத்துறையினர் கைப்பற்றினர்.கடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
கடத்தி வரப்பட்ட 81 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.30 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.