/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி
/
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜன 18, 2024 05:38 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் வைகை ஆற்றிலிருந்து ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பகுதிக்கு தண்ணீர் செல்வதால் இரண்டாம் போக பயிர் சாகுபடி செய்ய உள்ளதாக என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வைகை பாசனத்தில்கடைமடைப் பகுதியாகும்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாமல் மேல் உள்ள பகுதிகளான விரகனுார், பேரணை பகுதியில் உள்ள பாசன நிலங்களுக்கு தரும் முக்கியத்துவம் ராமநாதபுரம் பகுதிக்கு தரப்படுவதில்லை.
இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்துள்ளது. இதன் காரணமாக வைகை அணை நிரம்பி உபரி நீர் வைகை ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது.
வைகை ஆற்றில் வரும் தண்ணீர் பேரணை, விரகனுார், பார்த்திபனுார் தடுப்பணைகளில் தேக்கியது போது திறந்து
விடப்படும் எஞ்சிய நீர் மட்டுமே ராமநாதபுரத்திற்கு வருகை தருகிறது. தற்போது சித்தனேந்தல் தடுப்பணையில் இருந்துகீழ நாட்டார் கால்வாய் வழியாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பகுதிக்கு வைகை ஆற்று நீர் சென்று வருகிறது.
இதன் காரணமாக தற்போது விவசாயிகள் முதல் போக அறுவடைப்பணிக்காக காத்திருக்கின்றனர். இந்தாண்டு இரண்டாம் போகம் விளைவிக்க தேவையான அளவு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள்மகிழ்ச்சியடைந்துள்ளனர்.-----