/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குஜராத் பக்தர்களிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
/
குஜராத் பக்தர்களிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 19, 2024 10:38 PM

பரமக்குடி : பரமக்குடி வழியாக ராமேஸ்வரம் நோக்கி காரில் சென்ற குஜராத் பக்தர்களிடம் உரிய ஆணவங்கள் இல்லாததால் ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அஜித் மகராஜ், நக்கத்ரன், கட்ச் ஆகியோர் மதுரையில் இருந்து வாடகை காரில் ராமேஸ்வரம் நோக்கி சென்றனர்.
ராமநாதபுரம் இருவழிச்சாலை கீழக்கோட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மண்டபம் பி.டி.ஓ., சங்கரபாண்டியன் தலைமையில், டவுன் சிறப்பு எஸ்.ஐ., மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குஜராத் பக்தர்கள் ஆவணங்கள் இன்றி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச் செல்வது தெரிந்தது. அதனை கைப்பற்றி பரமக்குடி தாசில்தார் சாந்தி வசம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், குஜராத்தில் இருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக பக்தர்களிடம் வசூல் செய்து ராமேஸ்வரம் கோ சுவாமி மடத்திற்கு அட்வான்ஸ் கொடுக்க சென்றதாக தெரிவித்துள்ளனர்.
சரியான ஆவணங்கள் கொடுத்த பிறகு பணம் திருப்பி வழங்கப்படும் என தாசில்தார் சாந்தி தெரிவித்தார்.

