/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜோதி ரகம் நெல் விலை ரூ.600 அதிகரிப்பு; குறைந்த செலவில் இருப்பு வைத்திருந்தனர்.. விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : ஏப் 10, 2024 05:56 AM
திருவாடானை : ஜோதி ரக நெல் அதிகரிப்பால் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நெல் மூடைகளை சேமித்து வைத்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு ஆர்.என்.ஆர்., ஜோதி போன்ற நெல் ரகங்கள் அதிகமாக விளைவிக்கப்பட்டது. இதில் ஆர்.என்.ஆர்., ரகத்திற்கு நல்ல விலை கிடைத்தவுடன் விவசாயிகள் உடனுக்குடன் விற்பனை செய்து விட்டனர்.
ஜோதி ரகத்தை குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மூடைகளை சேமித்து வைத்தனர்.
விலை அதிகரித்த பின் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளலாம் என ஒழுங்கு முறை விற்பனை நிலைய அலுவலர்கள் கிராமங்களில் கூட்டங்களை நடத்தி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
டன்னுக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டதால் ஏராளமான விவசாயிகள் ஆர்வமாக ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் சேமிக்கத் துவங்கினர். இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. தற்போது ஜோதி ரகம் நெல் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயி கவாஸ்கர் கூறுகையில், அறுவடை நேரத்தில் 62 கிலோ ஜோதி ரக நெல் மூடை 1100 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கினர். தற்போது 1700 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.