ADDED : அக் 06, 2025 05:46 AM
கடலாடி : கடலடியில் ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. கடலாடி ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி சக்திவேல் தலைமை வகித்தார்.
மாநில நிர்வாகி சி.ஆர்.தாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கோட்டைச்சாமி, சீனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
யோகாசனம், சிலம்பம் சுற்றுதல், பிரார்த்தனை, கொடி வணக்கம் உள்ளிட்டவைகள் நடந்தது. பாரதமாதா உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் ஏராளமான பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி தொண்டர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம்: அழகன் குளத்தில் ஹிந்து சமூக சபை தலைவர் பாஸ்கரன் தலைமையில் விஜயதசமி, ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தம், வளவாசி கல்யாண் சேவா மாநில ஒருங்கிணைப்பாளர் துளசி ராமன் கலந்து கொண்டனர்.