/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எக்ஸ்ரே பிரிவில் 8 நுண்கதிர் வீச்சாளர் காலிப்பணியிடம்; தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில்

ADDED : ஏப் 07, 2025 06:56 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நுண்கதிர் வீச்சாளர் பணியிடங்களில் 8 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் பதில் அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
எக்ஸ்ரே எடுக்கும் இடத்தில் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து எக்ஸ்ரே எடுக்கும் நிலை உள்ளது.
இது குறித்து முதுகுளத்துார் முகமதியார் தெற்கு தெருவை சேர்ந்த ஆஷிபாெஷரின் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எக்ஸ்ரே பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
மருத்துவமனை நிர்வாக அலுவலர் ஜவஹர்லால் பதில் தெரிவித்துள்ளார்.
அதில் தற்போது பணியிடத்தில் 2 நுண்கதிர் வீச்சாளர்களும், 2 இருட்டறை உதவியாளர்கள் என நான்கு பேர் பணிபுரிகின்றனர். இதில் நுண்கதிர் வீச்சாளர் பணியிடத்தில் 8 காலிப்பணியிடங்களும், இருட்டறை உதவியாளர் பணியிடத்தில் 3 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
10 பேர் பணி செய்ய வேண்டிய இடத்தில் நுண்கதிர் வீச்சாளர்கள் 2 பேர் மட்டுமே பணியில் இருப்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது.
அரசும், மருத்துவமனை நிர்வாகமும் எக்ஸ்ரே பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.