/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ருத்ராபிேஷக பூஜை
/
ராமேஸ்வரம் கோயிலில் ருத்ராபிேஷக பூஜை
ADDED : பிப் 11, 2025 04:59 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிகலிங்கம் பிரதிஷ்டை செய்த 5ம் ஆண்டு விழாவையொட்டி சிருங்கேரி மடத்தினர் ருத்ராபிேஷக பூஜை செய்தனர்.
ராமேஸ்வரம் கோயிலில் தினமும் அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை ஸ்படிகலிங்கம் பூஜை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வார்கள். பழமையான இந்த ஸ்படிகலிங்கம் 2020ல் சேதமடைந்தது.
இதையடுத்து சிருங்கேரி மடம் சார்பில் புதிய ஸ்படிகலிங்கம் வழங்கி பிரதிஷ்டை செய்தனர்.
இதனை பிரதிஷ்டை செய்த 5ம் ஆண்டு விழாவையொட்டி நேற்று இரவு 7:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயில் சுவாமி சன்னதி அருகில் சிருங்கேரி மடம் சார்பில் ருத்ராபிஷேக பூஜை நடந்தது.
இதில் சிருங்கேரி மடம் நிர்வாகிகள் வழக்கறிஞர் மாதவன், ரமேஷ், ராமேஸ்வரம் மடத்தின் மேலாளர் மணிகண்ட நாராயணன் உட்பட பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

