/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை யினர் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம்

ADDED : ஜன 05, 2024 05:22 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் அய்யாத்துரை தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பிரான்சிஸ், துணைத் தலைவர் குருவேல், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். அரசாணைப்படி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கூலி உயர்வு வழங்க வேண்டும்.
டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு நகராட்சி ரூ.610, ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.533 தினசரி சம்பளம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி, பி.எப். எண் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதன் பிறகு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.