UPDATED : நவ 06, 2026 08:47 PM
ADDED : நவ 06, 2026 08:44 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தீயணைப்பு நிலையம் சார்பில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுதல், பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். சிறப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீபாவளி பாதுகாப்பு போலி ஒத்திகை, பாதுகாப்பாக வெடி வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரிடர் காலங்களில் மக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் காப்பாற்றுவது, தண்ணீரில் சிக்குபவர்களை காப்பாற்றுவது, தீயை அணைப்பது, முதலுதவி அளிப்பது, பருவமழையின் போது இடி மின்னல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
