/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயிலில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு
/
ரயிலில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 10, 2025 04:31 AM
ராமநாதபுரம்: -ரயிலில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பு குறித்து ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் ஓடும் ரயிலில் ஜோலார்பேட்டையில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு செய்த சம்பவத்தையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயிலில் பயணிக்கும் பெண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் ரயில்வே எஸ்.ஐ., இளங்கோவன் தலைமையில் போலீசார் ரயிலில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பிரச்னை என்றால் ஹெல்ப் லைன் 139 ல் புகாரளிப்பது எப்படி, அதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டது. அவசர காலங்களில் பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது என பெண்களுக்கு போலீசார் தெரிவித்தனர்.