/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதுரை, சென்னை செல்லும் சாயல்குடி நிலக்கடலை படி ரூ.40க்கு விற்பனை
/
மதுரை, சென்னை செல்லும் சாயல்குடி நிலக்கடலை படி ரூ.40க்கு விற்பனை
மதுரை, சென்னை செல்லும் சாயல்குடி நிலக்கடலை படி ரூ.40க்கு விற்பனை
மதுரை, சென்னை செல்லும் சாயல்குடி நிலக்கடலை படி ரூ.40க்கு விற்பனை
ADDED : பிப் 01, 2024 07:13 AM

கீழக்கரை : சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி, கடுகுச்சந்தை, பூப்பாண்டியபுரம், உறைகிணறு, நரிப்பையூர், கூராங்கோட்டை, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
பனைமரக் காடுகளுக்கு நடுவே உள்ள நிலங்களில் ஊடுபயிராக நிலக்கடலை ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் எதிர்பார்த்த பருவமழை பெய்ததாலும், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளதால் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. நிலக்கடலை வியாபாரிகள் கூறியதாவது:
சாயல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் நிலக்கடலை அதிக எண்ணெய் சத்து கொண்டதாகவும், முதல் தரமாக உள்ளதால் இவற்றிற்கு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் தேவை நிலவுகிறது.
இதனால் நிலக்கடலையை தின்பண்ட பயன்பாட்டிற்காகவும், கடலை எண்ணெய் எடுப்பதற்காகவும் வியாபாரிகள் விவசாயிகளிடம் முன்கூட்டியே சொல்லி பெற்று செல்கின்றனர்.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பஸ் ஸ்டாண்டுகளில் சாயல்குடி நிலக்கடலை என்று கூறியே தள்ளு வண்டிகளில் விற்பனை செய்கின்றனர். அதிக மணற்பரப்பு கொண்ட பகுதிகளும் செம்மண் காட்டிலும் நிலக்கடலை விளைச்சல் கண்டுள்ளது.
முன்பு ஒரு படி நிலக்கடலை ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.40 வீதம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம் என்றனர்.