/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீபாவளி நேரத்தில் செயற்கை நிறமேற்றிய பதார்த்தம் விற்பனை
/
தீபாவளி நேரத்தில் செயற்கை நிறமேற்றிய பதார்த்தம் விற்பனை
தீபாவளி நேரத்தில் செயற்கை நிறமேற்றிய பதார்த்தம் விற்பனை
தீபாவளி நேரத்தில் செயற்கை நிறமேற்றிய பதார்த்தம் விற்பனை
ADDED : அக் 27, 2024 03:48 AM
கீழக்கரை : கீழக்கரை, சிக்கல், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு ஏராளமான இனிப்பு பதார்த்தங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.
பேக்கரி, ஓட்டல்களில் விற்கப்படும் பன், கேக் மற்றும் இனிப்பு கார வகைகளில் அதிகளவு செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுகிறது. இனிப்புகளில் அதிகளவு சாக்ரீம் எனப்படும் செயற்கை இனிப்பும் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் கூறியதாவது:
தீபாவளி பண்டிகை காலங்களில் இனிப்பு, காரம் உள்ளிட்டவைகளில் அதிகளவு செயற்கை தன்மை உடைய வேதிப்பொருள்கள் சேர்ப்பதால் அதனை உட்கொள்ளும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிகளவு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
பிரைடு ரைஸ் சிக்கன் உள்ளிட்ட பாஸ்ட் புட் உணவுகளில் அதிகளவு குழம்பு மற்றும் சால்னாக்களில் நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பயன்படுத்துகின்றனர்.
அஜினமோட்டோவின் பயன்பாடு அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது.
எனவே உணவு கலப்பட தடுப்பு பிரிவு அலுவலர்கள் கடைகளில் முறையாக ஆய்வு செய்து பொதுமக்களுக்கு உடல் உபாதையை கொடுக்கும் உணவு பதார்த்தங்களை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபாவளி நேரங்களில் இது போன்ற புதிதாக முளைக்கும் கடைகளால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது என்றனர்.