/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் அஞ்சலகங்களில் புனித கங்கை நீர் விற்பனை
/
ராமநாதபுரம் அஞ்சலகங்களில் புனித கங்கை நீர் விற்பனை
ராமநாதபுரம் அஞ்சலகங்களில் புனித கங்கை நீர் விற்பனை
ராமநாதபுரம் அஞ்சலகங்களில் புனித கங்கை நீர் விற்பனை
ADDED : ஜூலை 22, 2025 03:39 AM
ராமநாதபுரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம், துணை அஞ்சலகங்களில் புனித கங்கை நீர் பாட்டில்கள் விற்கப்படுகிறது.
ராமநாதபுரம், பரமக்குடி தலைமை தபால் நிலையங்கள், முதுகுளத்துார், பார்த்திபனுார், ஆர்.எஸ்.மங்கலம், ராமேஸ்வரம் துணை தபால் நிலையங்களில் புனித கங்கை நீர் பாட்டில்கள் ஒன்று ரூ.30க்கு விற்கப்படுகிறது. உத்திரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி மலையில் இருந்து புனித கங்கை நீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் வேலையை அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது.
புதுமனை புகு விழா, தொழில் தொடங்குதல், சுப நிகழ்ச்சிகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். ஜூலை 24ல் ஆடி அமாவாசையை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் சிறப்பு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி கங்கை நீர் பாட்டில்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.

