/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாய பயன்பாட்டிற்கு கத்தி, கோடாரி விற்பனை
/
விவசாய பயன்பாட்டிற்கு கத்தி, கோடாரி விற்பனை
ADDED : ஜன 04, 2025 03:53 AM

திருவாடானை: திருவாடானை பகுதியில் விவசாய பயன்பாட்டிற்கு தேவையான கருவிகளை வடமாநில தொழிலாளர்கள் விற்பனை செய்கின்றனர்.விவசாயத்திற்கும் அதை சார்ந்த தொழில்களுக்கும் அரிவாள், கத்தி, கோடாரி, மண்வெட்டி, கடப்பாரை, கதிர் அறுக்கும் அரிவாள் தேவைப்படுகிறது. வட மாநில தொழிலாளர்கள் திருவாடானை, தொண்டி பகுதியில் தங்கியிருந்து தேவையான கருவிகளை தயாரித்து சாலை ஓரங்களில் விற்பனை செய்கின்றனர். விவசாயிகள் அவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், விவசாயத்திற்கும், வீட்டிற்கும் தேவையானவற்றை மட்டுமே செய்து தருகிறோம். ஒரு மாதமாக இங்கு முகாமிட்டுள்ளோம். பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ரூ.200 முதல் 500 வரை விலை நிர்ணயித்து விற்பனை செய்கிறோம் என்றனர்.

