/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மானிய விலையில் பழக்கன்றுகள் விற்பனை
/
மானிய விலையில் பழக்கன்றுகள் விற்பனை
ADDED : அக் 18, 2024 04:57 AM
ராமநாதபுரம்: மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில், தோட்டத்தில் வளர்க்க 5 வகையான பழக்கன்றுகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீதம் அரசு மானியத்தில் விற்கப்படுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆறுமுகம் கூறுகையில், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் சீத்தா, கொய்யா, நெல்லி, பப்பாளி, சப்போட்டா ஆகிய பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு ரூ.200 மதிப்புள்ளது. 75 சதவீதம் மானியத்தில் ரூ.50க்கு வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் ஆதார்கார்டு, புகைப்படத்துடன் அருகேயுள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ஒரு குடும்பத்திற்கு ஒரு தொகுப்பு தான் வழங்கப்படும். மாவட்டத்தில் 17 ஆயிரத்து 320 பழத்தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது என்றார்.