நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டை இந்திரா நகரில் மன்னார் வளைகுடா கடலில் சமுத்திர பூஜை விழா நடந்தது.
இந்திரா நகரைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மன்னார் வளைகுடா கடற்கரை முன்பு தேங்காய் பழத்தட்டு, ஊதுபத்தி, பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களுடன் வரிசையாக நின்றனர்.
பின்னர் கடலுக்கு தனித்தனியாக சமுத்திர பூஜை செய்து கடல் மாதாவை வழிபாடு செய்தனர். கடலில் மீன்வளம் அதிகரிக்கவும், உலக நன்மைக்காகவும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

