தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சனவேலி பாலத்தில் விளக்குகள் தேவை

சனவேலி பாலத்தில் விளக்குகள் தேவை

சனவேலி பாலத்தில் விளக்குகள் தேவை


ADDED : அக் 29, 2024 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 04:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி உயர்மட்ட பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க பயணிகள் வலியுறுத்தினர்.

திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலியில் 2004 டிச.,ல் கோட்டை கரை ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அப்பகுதியில் தரைப்பாலத்தின் வழியாக சென்ற அரசு பஸ் நீரில் அடித்துச் செல்லப்பட்டு 34 பேர் பலியாகினர்.

அதைத்தொடர்ந்து தரைப் பாலமாக இருந்த இந்த பாலம் உயர்மட்ட பாலமாக கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருக்கிறது.

திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர். எஸ்.மங்கலம் அருகே முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தில் இரவில் மதுப் பிரியர்கள் மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர். இரவு நேரத்தில் பாலம் இருள் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி கிராமங்களுக்கு செல்வோர் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us