தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் ரோட்டில் மணல் வாகன ஓட்டிகள் அவதி

ராமேஸ்வரம் ரோட்டில் மணல் வாகன ஓட்டிகள் அவதி

ராமேஸ்வரம் ரோட்டில் மணல் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜூன் 05, 2025 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2025 01:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் ரோட்டோரத்தில் மண் குவிந்துள்ளதால் காற்றில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம், திருப்புல்லாணி, ஏர்வாடி, தேவிப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள ராமநாதபுரம் - ராமேஸ்வரம், ராமநாதபுரம் ரோட்டோரத்தில் மண் குவிந்து கிடக்கிறது.

பலத்த காற்று வீசும் போது மண் துாசி பறந்து புழுதி கிளம்புவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ரோட்டோரம் குவிந்துள்ள மணலை அகற்ற சம்பந்தப்பட்ட ஊராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us