/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காஞ்சிரங்குடியில் மகான் பக்கீர் அப்பா ஒலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு விழா

ADDED : ஆக 19, 2025 01:22 AM

கீழக்கரை : -கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் மகான் பக்கீர் அப்பா ஒலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
இவ்விழா ஆக.,5ல் தர்காவில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் மதியம் காஞ்சிரங்குடி ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து உண்டியல் குடம் ஊர்வலமாக புறப்பட்டு 3 கி.மீ.,ல் உள்ள மன்னார் வளைகுடா கடற்கரை அருகே உள்ள பக்கீர் அப்பா தர்காவை வந்தடைந்தது.
பின்னர் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கப்பல் உருவம் மற்றும் 15 அடி உயரம் கொண்ட மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு தர்காவினை வந்தடைந்தது.
பின்னர் மக்பராவிற்கு புனித சந்தனம் பூசப்பட்டு பச்சை வண்ணப் போர்வை போர்த்தப்பட்டு மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டது. இவ்விழாவில் அனைத்து சமுதாய பொதுமக்களும் பங்கேற்றனர்.