/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஏராளமானோர் பங்கேற்பு
/
ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஏராளமானோர் பங்கேற்பு
ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஏராளமானோர் பங்கேற்பு
ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஏராளமானோர் பங்கேற்பு
ADDED : மே 10, 2025 02:09 AM
கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர். சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஏப்., 29 (செவ்வாய்க்கிழமை) மாலை மவுலீதுடன் விழா துவங்கியது. தொடர்ந்து 23 நாட்களுக்கு மாவட்ட தலைமை காஜியார் சலாஹுதீன் தலைமையில் மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து மவுலீது என்னும் புகழ் மாலை ஓதப்படுகிறது.
நேற்று மாலை 4:00 மணிக்கு ஏர்வாடியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் நடனமாடியபடி முன்னே செல்ல மேளதாளங்கள் முழங்க யானையின் மீது பச்சை வண்ண பிறைக்கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
தர்காவை மூன்று முறை வலம் வந்தபின் பீடத்தில் நிறுவப்பட்ட 80 அடி உயர கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது.
மே 21 மாலை சந்தனக்கூடு விழா துவங்குகிறது. மே 22 அதிகாலை மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் கொண்டுவரப்பட்டு தர்காவில் உள்ள புனித மக்பராவில் வண்ணப் போர்வைகள் போர்த்தப்பட்டு குடங்கள் மூலம் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.
மே 28 மாலை கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.