ADDED : ஜூலை 29, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சவேரியார் நகர் சந்தியாகப்பர் சர்ச் எட்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. முன்னதாக, திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இரவில் தேர் பவனி விழா நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், சந்தியாகப்பர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வீதி உலா வந்த தேரை, தெருக்களில் பெண்கள் மாக்கோலம் இட்டு வரவேற்றனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சவேரியார் நகர் கிராமத்தினர் செய்திருந்தனர்.