/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தங்கம் கடத்தலை தடுப்பதற்கு தனிப்படை அமைக்கப்படும் சந்தீஷ் எஸ்.பி., பேட்டி
/
தங்கம் கடத்தலை தடுப்பதற்கு தனிப்படை அமைக்கப்படும் சந்தீஷ் எஸ்.பி., பேட்டி
தங்கம் கடத்தலை தடுப்பதற்கு தனிப்படை அமைக்கப்படும் சந்தீஷ் எஸ்.பி., பேட்டி
தங்கம் கடத்தலை தடுப்பதற்கு தனிப்படை அமைக்கப்படும் சந்தீஷ் எஸ்.பி., பேட்டி
ADDED : பிப் 29, 2024 11:20 PM

திருவாடானை, - ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கம், கஞ்சா கடத்தலை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் கூறினார்.
திருவாடானை டி.எஸ்.பி., அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்து அவர் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 165 போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டுஉள்ளனர். அனைவரும் பயிற்சியில் உள்ளனர். ஒரு மாதத்தில் அனைவரும்பொறுப்பார்கள். 210 பேர் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாடானை சப்டிவிஷனை பொறுத்தவரை பெரிய பிரச்னைகள் இல்லை. குண்டர்கள், ரவுடிகள் குறைவாக உள்ளனர். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம்நீண்ட கடற்கரையைக் கொண்டது. கடத்தல்காரர்கள் நாட்டுப்படகில் தான் தங்கம் கடத்துகின்றனர். ராமேஸ்வரம் அருகே வேதாளை கடலில் தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்களில் சிலரைப் பிடித்து விசாரிக்கிறோம். தங்கம் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை கூற மறுக்கிறார்கள்.
தங்கம், கஞ்சா கடத்தலை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்படும். திருவாடானையில் மணல் கடத்தலை தடுக்க கூடுதலாக சோதனைச்சாவடிகள் திறக்கப்படும். அனைத்து போலீஸ் டேஷன்களிலும்வரவேற்பார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புகார் அளிக்க செல்பவர்களை அவர்கள் வரவேற்று குறைகளை கேட்பார்கள். போலீஸ் குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் புதன் கிழமை மாவட்ட அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.
அது தவிர வாரத்திற்கு இரு முறை கிராமங்களுக்கு சென்று நான் மக்களை நேரில் சந்தித்துகுறைகளை கேட்டு வருகிறேன்.
இதில் பெரும்பாலானோர் போலீஸ் பிரச்னைகளை கூறுவதில்லை. வருவாய்த்துறை சம்பந்தமான குறைகளை மனுக்களாக தருகின்றனர்.அந்த மனுக்கள் வருவாய்த்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றார். திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷ் உடன்இருந்தார்.

