ADDED : டிச 11, 2024 07:22 AM

நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவில் மற்றும் குணநதீஸ்வரர் கோயில்களில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
நயினார்கோவிலில் சவுந்தர்ய நாயகி நாகநாத சுவாமி கோயில் உள்ளது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற பெருமை பெற்ற இங்கு அனைத்து தோசஷ நிவர்த்திக்கும் மக்கள் தரிசனம் செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.
இதே போல் நயினார்கோவில் அருகே மஞ்சகொள்ளை, சிறகி கோட்டை, அக்கிரமேசி கிராம எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குணநதீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேக விழா நடந்தது.
இதையடுத்து இரண்டு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு மகாபூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து குணநதீஸ்வரருக்கு 1008 சங்குகளால் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
108 சங்காபிேஷகம்
திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் 108 சங்கபாபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

