/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலெக்டர் அலுவலக ரோட்டில் பன்றிகளால் சுகாதாரக்கேடு
/
கலெக்டர் அலுவலக ரோட்டில் பன்றிகளால் சுகாதாரக்கேடு
ADDED : அக் 21, 2024 04:47 AM
பட்டணம்காத்தான்: ராமநாபுரம் கலெக்டர் அலுவலக வளாகம், பட்டணம்காத்தான் ஊராட்சி ஆத்மநாதசாமி நகர் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில்பன்றிகள் சுற்றித்திரிவதால் சுகாதாரக்கேடு மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதிநகரில் பழைய, புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம், மகிளா நீதிமன்றம், ஆதார் புகைப்பட மையம், இ-சேவை மையம்,மத்திய கூட்டுறவு வங்கிகள்உள்ளன.
இதுபோக வளாகத்தில் விளையாட்டு அரங்கம், மாவட்ட ஒருந்கிணைந்த நீதிமன்றம், வேளாண் இணை இயக்குனர் அலுவலகம், மீன்வளத்துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகிறது.
இந்த இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக பன்றிகள் ரோட்டில் திரிகின்றன. குறுக்கே வரும்போது விபத்து அபாயம் உள்ளது.குப்பைத்தொட்டி அருகே பன்றிகள் திரிவதால் துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பட்டணம்காத்தான் ஆத்மநாதசாமி நகர் வடக்கு, கிருஷ்ணா நகர் பகுதிகளிலும் ஏராளமான பன்றிகள் குட்டிகளுடன் திரிவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.எனவே பன்றிகள்வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.