UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 03:14 PM
அ நிறம் | அளவு
ரெகுநாதபுரம்: பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி ரெகுநாதபுரம், உத்தரவை உள்ளிட்ட பகுதிகளில் ஸ்வட்ச் பாரத் சேவா நிகழ்ச்சி சார்பில் துாய்மைப் பணி நடந்தது. பஸ் ஸ்டாண்ட், பயணியர் நிழற்குடை பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி, பூங்காக்கள், மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் துாய்மைப் பணி நடந்தது.
பா.ஜ., திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் முனியசாமி, முன்னாள் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன், ஆட்டோ டிரைவர் முனியசாமி, உத்தரவை கணேஷ், முத்துராமன், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
