UPDATED : ஆக 16, 2026 03:46 PM
ADDED : ஆக 16, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
திருவாடானை:திருவாடானை ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய துாய்மை பணியாளருக்கு சுதந்திர தின விழாவில் விருது வழங்கபட்டது.திருவாடானை ஊராட்சியில் துாய்மை பணியாளராக பணியாற்றுபவர் கிருஷ்ணமூர்த்தி 44. இந்த ஊராட்சியில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் சுகாதார பணிகளை சிறப்பாக செய்து வந்தார்.
ஆகஸ்ட் 15 ராமநாதபுரத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தெருக்கள், பொது இடங்கள் மற்றும் சுகாதார பணிகளில் தினமும் அதிகாலையில் துாய்மை பணிகளை துவங்கி உணர்வுடன் பணியாற்றிய துாய்மை பணியாளர் கிருஷ்ணமூர்த்தியின் பணியை பாராட்டி கலெக்டர் சிவகுருபிரபாகரன் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கினார். கிருஷ்ணமூர்த்திக்கு ஊராட்சி அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
