/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சம்பளம் வழங்க கோரி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
/
சம்பளம் வழங்க கோரி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
சம்பளம் வழங்க கோரி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
சம்பளம் வழங்க கோரி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
ADDED : ஏப் 30, 2025 06:28 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சுகாதாரப்பணிகள் பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சியில்ஒப்பந்த அடிப்படையில் 100பேர் துாய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு சம்பளம் சரிவர வழங்கப்படவில்லை. இது குறித்து ஒப்பந்ததாரர்களிடமும், நகராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை கேட்டுள்ளனர்.ஆனால் 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.
இதையடுத்து நேற்று துாய்மைப் பணியாளர்கள்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குப்பை அள்ளும் வாகனங்கள்எடுத்துச் செல்லப்படாமல் நகராட்சிக்கு சொந்தமான வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் நகரில்சுகாதாரப்பணிகள் பாதிக்கப்பட்டது.
நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் கூறுகையில், ஒப்பந்ததாரருக்கு மார்ச் மாதம் வரை பணம் வழங்கப்பட்டது. புதிய நிதியாண்டில் இந்த மாதம் தான் வழங்கவில்லை.
சம்பள பாக்கி குறித்து ஒப்பந்ததாரரிடம் பேசி நாளை (இன்று) முதல் துாய்மை பணிகள் தொய்வின்றி நடைபெற நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.