தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மரக்கன்றுகள் பயன்பாடு இல்லாமல் வீணாகிறது

 மரக்கன்றுகள் பயன்பாடு இல்லாமல் வீணாகிறது

 மரக்கன்றுகள் பயன்பாடு இல்லாமல் வீணாகிறது


ADDED : பிப் 17, 2026 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 07:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

​திருவாடானை: திருவாடானை வேளாண்மை அலுவலக வளாகத்தில், பயன்பாடின்றி குவித்து வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் கவனிப்பாரற்று காய்ந்து வருகிறது.

​திருவாடானை பாரதிநகரில் பழைய வேளாண்மை அலுவலக கட்டடம் உள்ளது. இக் கட்டடம் முன்பு, தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான ஏராளமான மரக்கன்றுகள் கடந்த சில நாட்களாகக் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த மரக்கன்றுகளை பராமரிக்கவோ அல்லது விவசாயிகளுக்கு விநியோகிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பசுமைத் தமிழகம் போன்ற திட்டங்கள் மூலம் காடுகளின் பரப்பை அதிகரிக்க அரசு நிதி ஒதுக்கி வருகிறது.

பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கபட்ட இந்த மரக்கன்றுகள் உரிய நேரத்தில் நடவு செய்யப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.

​பிளாஸ்டிக் பைகளில் உள்ள மண் காய்ந்து, கன்றுகள் ஒவ்வொன்றாக கருகத் தொடங்கியுள்ளன. குப்பை மேடு போல காட்சியளிக்கிறது. இன்னும் காலதாமதம் செய்யாமல், எஞ்சியிருக்கும் பசுமையான கன்றுகளையாவது உடனடியாகப் பள்ளிகள், பொது இடங்கள் அல்லது ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us