/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலரில் சேலை சிக்கியது மகன் கண் முன் தாய் பலி
/
டூவீலரில் சேலை சிக்கியது மகன் கண் முன் தாய் பலி
ADDED : பிப் 01, 2024 02:24 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் டூவீலரில் பயணித்தபோது சேலை சிக்கியதில் மகன் கண் முன் தாய் பலியானார்.
பரமக்குடி பாண்டியன் தெரு கணேசன் மனைவி சாந்தி 52. நேற்று காலை 8:30 மணிக்கு சாந்தி மகன் வெங்கடேஷ் 25, என்பவருடன் டூவீலரில் சென்றார். பார்த்திபனுார் செல்லும் வழியில் கமுதக்குடி ரயில்வே மேம்பாலத்தில் சாந்தியின் சேலை டூவீலர் பின் சக்கர செயினில் சிக்கியது. அப்போது சேலை இழுத்ததில் கீழே விழுந்து பின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் அவர் பலியானார். வெங்கடேஷ் கையில் சிறிய காயத்துடன் தப்பினார்.போலீசார் விசாரிக்கின்றனர்.
*இது போல் டூவீலர்களில் செல்லும் போது பெண்கள் சேலை மற்றும் சுடிதார் துப்பட்டாவை இறுக்கி கட்டிக் கொள்வது அவசியம்.