ADDED : ஜூலை 30, 2025 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; சாத்துக்குடி பழம் வரத்து அதிகரித்துள்ளதால் ராமநாதபுரம் வாரச்சந்தையில் 3 கிலோ ரூ.100க்கு விற்றது.
மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து ராமநாதபுரம் சந்தைக்கு சாத்துக்குடி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் கிலோ ரூ.50 வரை விற்ற சாத்துக்குடி விலை சரிவடைந்து கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது.
பட்டணம்காத்தான் டி-பிளாக்கில் நடந்த வாரச்சந்தையில் 3 கிலோ ரூ.100க்கு விற்றது. வெயில் அதிகரிப்பால் குளிர்பானம் தயாரிக்க பொதுமக்கள் அதிகளவில் வாங்குகின்றனர் என வியாபாரிகள் கூறினர்.

